sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்

/

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்


ADDED : அக் 04, 2025 04:10 AM

Google News

ADDED : அக் 04, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நால்வர் கைது

வடமதுரை: வடமதுரையில் குற்ற வழக்குகள் தொடர்பாக பரமத்திவேலுார் ராதாகிருஷ்ணன் 46, நாகையகோட்டையை மாரிமுத்து 45, திண்டுக்கல் பகுதி ஈஸ்வரன் 43, வீரமுத்து 69 ,ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். வேடசந்துார் டி.எஸ்.பி, பவித்ரா, வடமதுரை இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் தலைமையிலான போலீசார் நால்வரையும் கைது செய்து வேடசந்துார் நீதிமன்றத்தில்ஆஜர் செய்தனர்.

கார் மோதி தொழிலாளி பலி

வேடசந்துார்: கல்வார்பட்டி ஓசபாளையத்தை சேர்ந்தவர் சென்ட்ரிங் தொழிலாளி ராமலிங்கம் 58. வேடசந்துார் கரூர் ரோட்டில் ரங்கநாதபுரம் தனியார் ஓட்டல் முன்பு டூவீலரில் சென்றபோது அதே திசையில் பின்னால் வந்த கார் மோதியது. இதில் காயமடைந்த ராமலிங்கம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கூம்பூர் எஸ்.ஐ., சுரேஷ் பாபு விசாரிக்கிறார்.

கார்கள் விபத்தில்; மூவர் காயம்

வடமதுரை: கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் 47. இவரது மனைவி மங்கையர்கரசி 44, தாயார் காலவதி 68. சென்னையில் இருந்து நேற்று காரில் ஊர் திரும்பினார். காலை 6:00 மணிக்கு வடமதுரை திருச்சி ரோட்டில் வந்தபோது ரோட்டோர பாலத்தில் மோதியது. விபத்தில் மூவரும் காயமடைந்தனர். எரியோட்டில் நடந்த மற்றொரு விபத்தில் வேடசந்துார் ரோட்டோர மின்கம்பத்தில் கார் மோதியதில் மின்கம்பம் ஒடிந்தது.

நீதிமன்ற ஊழியர் தற்கொலை

திண்டுக்கல் : என்.ஜி.ஓ.,காலனி அருகே ராமர் காலனியை சேர்ந்தவர் கார்த்திபன் 38. வேடசந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த இவர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று வீட்டில் துாக்கிட்டு இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

பிடிவாரன்ட் கைது

திண்டுக்கல்: என்.ஜி.ஓ.காலனி வடக்கு ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜா 40. 2023 ல் நடந்த திருட்டு வழக்கில் திண்டுக்கல் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தார். 2 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் திண்டுக்கல் 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.அதன்படி தாலுகா போலீசார் அவரை கைது செய்தனர்.

மோட்டார் ஒயர்கள் திருட்டு

பாலசமுத்திரம் : பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கிணற்றுப் பாசன வசதி உடையவை. சில நாட்களாக கிணற்று பாசனத்தில் பயன்படுத்த வரும் மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ள உள்ள காப்பர் ஒயர்கள் திருடு போயின. போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை

நெய்க்காரப்பட்டி : நெய்க்காரப்பட்டி அருகே அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா 43. துணிக்கடை வைத்துள்ள இவர் குடும்ப பிரச்னை காரணமாக நேற்று வீட்டில் துாக்கிட்டு இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

குளத்தில் மூழ்கி பலி

திண்டுக்கல்: மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டைக்குளத்தில் இறந்து கிடந்த வாலிபர் உடலை திண்டுக்கல் தீயணைப்பு உதவி அலுவலர் மயில்ராஜூ தலைமையிலான வீரர்கள் மீட்டனர். போலீஸ் விசாரணையில் ரண்மனைக்குளம் காந்திஜி புதுரோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணக்குமார் 33 ,என்பதும், கோட்டைக்குளத்தில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து பலியானதும் தெரிந்தது.






      Dinamalar
      Follow us