டூவீலர் விபத்தில் இருவர் காயம்
நத்தம்:- திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. நகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் 39. இவர் டூவீலரில் மனைவி ராமகலாவுடன் 37, மதுரை தேசிய நெடுஞ்சாலை பள்ளபட்டி பிரிவு அருகே சென்ற போது எதிரே நத்தம் வீராகோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் 49, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. கணவன், மனைவி இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கூலித்தொழிலாளி பலி
ரெட்டியார்சத்திரம்: சின்ன இடையபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சாமியப்பன் 65. அக்கரைப்பட்டி அருகே உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்குவதற்காக நடந்து சென்றபோது கார் மோதி இறந்தார். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் சாவு
ரெட்டியார்சத்திரம்: வேல்நகரை சேர்ந்தவர் கார்த்திக் சந்தனம்.பழநி அடிவாரம் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி 22. இவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு இறந்தார். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.-
கறி வாங்கிய தகராறில் தீ வைப்பு
வத்தலக்குண்டு: புதுப்பட்டி இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் பாலாஜி கோழிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சந்துரு 26 , 2 கிலோ கறி வாங்கி பணம் கொடுக்காததால் தகராறு ஏற்பட்டது.
இரவு கோழி கடைக்கு தீ வைத்ததில் கடை முழுவதும் சேதமடைந்தது. வத்தலக்குண்டு போலீசார் சந்துருவை கைது செய்தனர்.
விபத்தில் மூதாட்டி பலி
நெய்க்காரப்பட்டி: பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே அதே பகுதியை சேர்ந்த சரோஜா 75, பழநி கோவை சாலையை கடக்கும்போது டூவீலர் மோதியதில் இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
இருவர் கைது
திண்டுக்கல்: கடைவீதியை சேர்ந்த வியாபாரி சங்கர் 45. நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நின்ற போது அவரது அலைபேசியை பறித்து கொண்டு இருவர் தப்பினர். வடக்கு போலீசார் சீலப்பாடியை சேர்ந்த ராஜா 32, கம்பளியம்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் 43, ஆகியோரை கைது செய்தனர்.
தற்கொலை
நெய்க்காரப்பட்டி: அழகாபுரியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 48. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் துாக்கிட்டு இறந்தார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

