துாக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் : வடமதுரை அருகே புத்துார் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வீராச்சாமி 20. பாலமரத்துப்பட்டி தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்தார். நேற்றுமுன்தினம் மாலை ஸ்டோர் ரூமில் ஒயரை பயன்படுத்தி துாக்கிட்டு தற்கொலை செய்தார். திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரிக்கிறார்.
நீரில் மூழ்கி பலி
வடமதுரை : பாடியூர் கிரியம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் 22. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் நேற்று காலை தனது தோட்டத்திற்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மிரட்டல் விடுத்தவர் கைது
நத்தம் :கோசுகுறிச்சி-கரையூரை சேர்ந்தவர் தொழிலாளி. குமார் 45. அதே பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் 45. இருவர் இடையே முன்விரோதம் இருந்தது. ஈஸ்வரன் கம்பியால் குமாரின் வீட்டை உடைத்து தகராறு செய்ததோடு குமாரை தாக்கி மிரட்டல் விடுத்தார். நத்தம் -எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் ஈஸ்வரனை கைது செயதார்.
ஸ்பின்னிங் மில்லில் தீ
திண்டுக்கல்: ராயர்பட்டி ரோட்டில் சந்திரசேகரன் சொந்தமான ஸ்பின் டெக்ஸ் ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில்லில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இயந்திரங்கள், பஞ்சு, சோலார் பேனல்கள் எரிந்தன . மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ், புகழேந்தி தலைமையிலான குழுவினர் ஒரு மணி நேரம் போராடி தீ அணைத்தனர்.
அலைபேசி திருடியவர் கைது
திண்டுக்கல் :நாகல் நகரை சேர்ந்தவர் ஒய்.எம்.ஆர்.,பட்டி முருகன் கோயில் பூஜாரி பிரேம்குமார். இவரின் அலைபேசி திருடுபோனது. வடக்கு போலீசார் சி.சி.டி.வி.,கேமரா பதிவுப்படி அதேப்பகுதியை சேர்ந்த தீபக் மணிகண்டனை 22, கைதுசெய்தனர்.
கதண்டு கடித்ததில் இருவர் காயம்
திண்டுக்கல் : வடமதுரை அருகே அம்மாப்பட்டியை சேர்ந்தவர்கள் கூலி தொழிலாளர்கள் நல்லுசாமி 37 ,கருப்பன் 34. திருமலைக்கேணியில் கட்டட பணி செய்த போது கூட்டமாக வந்த வண்டு கடித்ததில் இருவரும் காயமடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

