விபத்தில் ஒருவர் பலி
சாமிநாதபுரம்: பழநி தாளையம் அருகே போதுப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி வள்ளிமுத்து 30. நண்பர் ராஜாராம் உடன் பழநி நோக்கி டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு பகுதியில் உள்ள சாலையோர தடுப்பு கம்பியில் மோதியதில் வள்ளிமுத்து இறந்தார். ராஜாராம் காயமடைந்தார். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளிக்கு பிளேடால் கிழி
குஜிலியம்பாறை: காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நுாற்பாலை தொழிலாளி மோகன்ராம் 25. காளியம்மன் கோயில் அருகே வாகனத்தில் சிலர் பாட்டு போட்டு ஆடிக்கொண்டு இருந்ததை வேடிக்கை பார்த்துள்ளார். அங்கிருந்தவர்கள் இவரிடம் வாக்கு வாதம் செய்தனர். வண்டி சாவி ,பிளேடால் மோகன்ராம் நெற்றியில் கிழித்து காயம் ஏற்படுத்தினர். குஜிலியம்பாறை எஸ்.ஐ., விஜய லிங்கன் விசாரிக்கிறார்.
டூவீலர் மோதி காயம்
குஜிலியம்பாறை: பாளையம் காட்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த தனியார் ஓட்டல் தொழிலாளி ஜீவதரன்19. டூவீலரில் சாணிபட்டி ரோடுகபில்தேவ் தோட்டம் அருகே சென்றார். எதிரே வந்த சேவகவுண்டன்புதுார் கோபிநாத் ஒட்டி வந்த டூ வீலர் மோதியது. ஜீவதரன் காயமடைந்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரித்தனர்.
கார் மீது மோதி ய டூவீலர்
நத்தம்: புதுப்பட்டியை சேர்ந்தவர் தொழிலாளி சிவக்குமார் 45. டூவீலரில் விளாம்பட்டி- பள்ளிவாசல் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் எதிரே வந்த கார் மீது மோதியது. சிவக்குமார் காயமடைந்தார். நத்தம் போலீசார் விசாரிக் கின்றனர்.

