/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நவ.17ல் நடக்கிறது மகளிர் தடகள போட்டி
/
நவ.17ல் நடக்கிறது மகளிர் தடகள போட்டி
ADDED : நவ 08, 2025 01:51 AM
நத்தம்: அத்லெட்டிக் பெடரேஷன் ஆப் இந்தியா, தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் அஸ்மிதா லீக் மகளிர் தடகள போட்டிகள் நவ .17ல் திண்டுக்கல் ஜி.டி.என்., கலை கல்லுாரியில் நடக்கிறது
14,16 வயது உட்பட்டோருக்கான பிரிவுகளில் தமிழகத்தின் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் உட்பட 17 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் கலந்து கொள்ளும் தடகள வீராங்கனைகள், பள்ளி மாணவிகள் தங்களது பதிவுகளை ddaaentry@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி, நேரில் நவ.15 மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் ஆர்.துரை, செயலாளர் எம்.சிவகுமார் செய்துள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு 73734 44447, 99941 33303ல் தொடர்பு கொள்ளலாம்.

