தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள் ...

 போலீஸ் செய்திகள் ...

 போலீஸ் செய்திகள் ...


ADDED : செப் 26, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன், எஸ்.ஐ., மலைச்சாமி, போலீசார் சோதனை நடத்தினர். கூட்டுறவு வங்கி செல்லும் ரோட்டில் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்த சின்னமுளையூர் பூவனை 43, கைது செய்தனர். ஆன்லைன் லாட்டரி சீட்டுக்கள், பணம் பறிமுதல் செய்யப் பட்டது.

தகராறில் வாலிபர் கைது

ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே கணக்கம்பட்டியில் கட்சியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் பேனர் வைத்தனர். அதே பகுதி சேனாதிபதி மகன் ஆர்யாபதி 20, அந்த பேனரை கிழித்ததுடன் கட்சியினரிடம் தகராறில் ஈடுபட்டார். நிர்வாகி மணிகண்டன் அளித்த புகாரில் ஆயக்குடி போலீசார் ஆர்யாபதியை கைது செய்தனர்.

கல்லுாரி வாகனம் மோதி காயம்

குஜிலியம்பாறை: ஆர்.கோம்பை தையல் தொழிலாளி பூபதி 47. இவர் தனது டூவீலரில் பாளையம் ரயில்வே மேம்பாலத்தை கடந்து சென்றபோது பின்னால் வந்த கரூர் தனியார் கல்லுாரி வாகனம் மோதியது. இவ்விபத்தில் படுகாயம் அடைந்த பூபதி கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டிரைவர் கரூர் சின்னாண்டிபட்டி பழனிச்சாமி 40, மீது குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us