ADDED : செப் 26, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுாரில் அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆதித்தமிழர் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். ஆதித்தமிழர் பேரவை ஒன்றிய செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். துாய்மை பணியாளர் சங்க மாநிலத்தலைவர் காளிராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் துாய்மை காவலர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, வாரம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
