/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலைக்கோட்டையில் போலீசார் பாதுகாப்பு
/
மலைக்கோட்டையில் போலீசார் பாதுகாப்பு
ADDED : டிச 04, 2025 05:55 AM

திண்டுக்கல்: திருக்கார்த்திகை விழாவையொட்டி திண்டுக்கல் மலைக்கோட்டையில் 30க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையில் உள்ள அபிராமி கோயிலை புனரமைத்து அபிராமி அம்மன் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் ஹிந்து அமைப்புகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் திருக்கார்த்திகையை யொட்டி மலைக்கோட்டை மீது தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
இதன் எதிரொலியாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை , மலைக்கோட்டை , அடிவார நுழைவு வாயில்களை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மலைக்கோட்டையின் பிரதான நுழைவுப்பாதையில் 5 பேர், பின்பக்கம் 10 பேர், மலை மீது என 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

