/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலை பணிக்காக தென்னை மரங்கள் அகற்றம் போலீசார் -- விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு
/
சாலை பணிக்காக தென்னை மரங்கள் அகற்றம் போலீசார் -- விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு
சாலை பணிக்காக தென்னை மரங்கள் அகற்றம் போலீசார் -- விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு
சாலை பணிக்காக தென்னை மரங்கள் அகற்றம் போலீசார் -- விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு
ADDED : செப் 20, 2024 02:32 AM

கன்னிவாடி:தருமத்துப்பட்டியில் நான்கு வழிச்சாலை பணியில் தென்னை மரங்கள் அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட பெண்கள் உட்பட 25 பேரை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் மேட்டூர்-பலக்கனுாத்து பகுதியில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது.
இங்குள்ள தர்மத்துப்பட்டி கோம்பை அருகே கோட்டை முத்தாலம்மன் கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இங்கு தென்னை மரங்களும், பூஜாரி நல்லான் தனது உறவினர்களுடன் 6 வீடுகள் கட்டி வசித்து வருகிறார்.
ரோடு பணிக்காக தென்னை மரங்களை அகற்ற சில மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத் துறையினர் சென்ற போது எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்புகாரின்படி வருவாய்த்துறை உயரதிகாரிகள் விசாரித்து வந்தனர். சம்பந்தப்பட்ட இடம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது எனக்கூறி நெடுஞ்சாலை, வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் தென்னை மரங்களை அகற்ற வந்தனர்.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க இவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ஐந்து பெண்கள் உட்பட 25 பேரை போலீசார் குண்டுகட்டாக அகற்றி கைது செய்தனர். இதன் பின்னர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் 35 தென்னை மரங்களை அகற்றினர்.
இதில் தென்னை மரம் சாய்ந்ததில் கார் சேதமடைந்தது. இப்பகுதியில் பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.