ADDED : ஜன 12, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : நவாமரத்துப்பட்டி ஸ்ரீ சாய் பாரத் கல்வி நிறுவனங்கள் சார்பில் பொங்கல் விழா நடந்தது.
கல்லுாரி நிர்வாக அலுவலர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
மேலாளர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர்கள் சாந்தி, பிரான்சிஸ், வின்சென்ட், துணை முதல்வர்கள் சிவரஞ்சனி, ஜென்சி உமா பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தாளாளர் வேம்பணன், கல்லுாரி முதல்வர் தேன்மொழி துவக்கி வைத்தார்.