/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
/
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
ADDED : ஜன 13, 2024 04:35 AM

நத்தம், :-நத்தம் என்.பி.ஆர்., கல்விக்குழுமத்தின் சார்பாக 72 பொங்கல் பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்தவிழாவில் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் மருதுகண்ணன் ,கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பாபிநாத், பல்தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் ஆனந்த், நர்சிங் கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி, கலை ,அறிவியல் கல்லுாரி கல்வி இயக்குனர் தேவி ஆசிரியர் ,மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். காளை மாடுகள் வரவழைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. உரியடித்தல், தேவராட்டம், சிலம்பாட்டம், நின்ஞாக், சிலம்பு வலை சுற்றுதல், தப்பாட்டம், மாடாட்டம், கும்மி, ஒயிலாட்டம், நாட்டுப்புற நடனம் நடத்தப்பட்டன. 3500 மாணவர்கள் பாரம்பரிய உடைகளுடன் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் : ஜி.டி.என். சாலையில் உள்ள எம்.எஸ்.பி.பள்ளி ஆசிரியைகள் விளையாட்டு மைதானத்தின் நுழைவு வாயிலில் வண்ண கோலமிட்டு பொங்கல் விழா கொண்டாடினர்.
வேடசந்துார்: வேடசந்துார் ஸ்ரீ மாலா மழலையர் தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. பள்ளி தாளாளர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். பேச்சுப்போட்டி ,நடன நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை வகித்தார். கூடுதல் அலுவலர் ஜெயராணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சண்முகம் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சரண்யா, ஆசிரியர்கள் காளீஸ்வரன், பாண்டிச்செல்வி, லதா, நித்தியானந்தம் பங்கேற்றனர்.
திண்டுக்கல் : மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் எஸ்.எம்.சி.,கல்வியாளர் டேவிட் ஜெயக்குமார் தலைமை வகித்தார். அல்போன்ஸ் ராஜம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் சுகந்தி ஸ்டெல்லாமேரி,பத்மாவதி,செல்வராணி பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் ஜெயந்திபிளாரன்ஸ் நன்றி கூறினார்.
சின்னாளபட்டி : சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் திலகம் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.
6 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் தனித்தனியே ஆசிரியர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து கும்மியடித்தல், குலவையிடுதல் போன்றவற்றுடன் கொண்டாடினர். கோலப்போட்டி ,பானை உடைத்தல் ,கபடி, தண்ணீர் குடம் சுமந்து செல்லுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. தாளாளர் சிவக்குமார், உதவி தலைமை ஆசிரியர் வெண்ணிலா, மேலாளர் பாரதிராஜா பரிசுகள் வழங்கினர்.
நத்தம்: சிறுகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா பள்ளி தலைமையாசிரியர் தனராஜன் தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் கோகிலாவாணி வீரராகவன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஆசை அலங்காரம் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டி , கோலப்போட்டி, கலை நிகழ்ச்சி நடந்தது. -
வேனாரில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பபள்ளியில் தலைமையாசிரியர் சித்ரா தலைமையிலும், செந்துறை- மாமரத்துபட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சங்கர் தலைமையிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடபட்டது.