ADDED : ஜன 17, 2025 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: பொங்கல் பண்டிகையின் நிறைவு நாளான நேற்று காணும் பொங்கலை பித்தளைப்பட்டி கிராமத்தினர் குடகனாற்றில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர்.
இதற்காக நேற்று குடகனாற்றில் கிராமத்தினர் குவிந்தனர். இதையொட்டி காளியம்மன் கோயிலுக்கு கிராமத்தினர் கால்நடைகளை அழைத்து வர அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் மகா தீபாராதனை, கால்நடைகளுக்கு தீர்த்தம் தெளித்தல் நடந்தது. இதை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.குடகனாற்றில் முளைப்பாரி இறக்கி வைத்து பெண்கள் கும்மியாட்டம், கிராமிய பாடல்கள் பாடினர். விசேஷ தீபாராதனைகளுக்கு பின் முளைப்பாரி ஆற்றில் கரைக்கப்பட்டது.