/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயில்களில் பொங்கல் சிறப்பு வழிபாடு
/
கோயில்களில் பொங்கல் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 15, 2024 11:28 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தேறியது.
மாவட்டத்தில் பொங்கல் விழாவையொட்டி கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், வெள்ளை விநாயகர் கோயில், ரயிலடி சித்தி விநாயகர், ராம்நகர் விநாயகர் கோயில், நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோயில், எம்.வி.எம்.நகர் பெருமாள் கோயில், கூட்டுறவு நகர் பஞ்சமுக அஞ்சநேயர் கோயில்களில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம்
செய்தனர். கிராம கோயில்களில் குலதெய்வங்களுக்கு பொங்கலிட்டு வழிபாடு நடந்தது. கோயில்களில் கரும்பு, வாழை, மாவிலை தோரணங்களுடன் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பல தனியார் நிறுவனங்கள் , போலீஸ் ஸ்டேஷன்களிலும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு வாசலின் கோலங்களால் பெரும்பாலான தெருக்கள் வண்ணமயமாக காட்சியளித்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு, மலர் அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தது.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோயில், கொத்தபுள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
கொடைக்கானல் குறிஞ்சிஆண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர், தாண்டிக்குடி பாலமுருகன், நாயுடுபுரம் துர்க்கை அம்மன், ஆனந்தகிரி பெரிய மாரியம்மன், வரதராஜ பெருமாள், கானல்காடு பூதநாச்சியம்மன்,பண்ணைக்காடு மயான காளியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குலதெய்வ கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது .
வடமதுரை: சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ராஜ அலங்காரத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நகர் வலம் நடந்தது. தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரன், எரியோடு மணியகாரன்பட்டி தாயம்மன். காணப்பாடி முத்தம்மன் உள்பட ஏராளமான குல தெய்வ கோயில்களிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தலைக்கட்டுதாரர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயிmf, நகர், கிராமப்புறம் என அனைத்து கோயில்களிலும் ம்ககள் அதிகளவில் திரண்டு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.