/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருமணம் என்ற பெயரில் ஏழை பெண்கள் விற்பனை; தப்பிய பெண் இன்ஜினியர் புகார்
/
திருமணம் என்ற பெயரில் ஏழை பெண்கள் விற்பனை; தப்பிய பெண் இன்ஜினியர் புகார்
திருமணம் என்ற பெயரில் ஏழை பெண்கள் விற்பனை; தப்பிய பெண் இன்ஜினியர் புகார்
திருமணம் என்ற பெயரில் ஏழை பெண்கள் விற்பனை; தப்பிய பெண் இன்ஜினியர் புகார்
ADDED : டிச 11, 2025 05:19 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்மாவட்டம் கொடைரோடு பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். பி.இ., இன்ஜினியரிங் முடித்த இவர் தாய் இல்லாததால் தந்தையின் பாதுகாப்பில் உள்ளார். வறுமையால் திருமணம் ஆகவில்லை.
இவர்களின் குடும்ப சூழலை தெரிந்து கொண்ட மற்றொரு பெண், ' எனக்கு தெரிந்த வயது முதிர்ந்த நபர் உள்ளார். அவரை திருமணம் செய்து கொண்டால் உன் குடும்பத்தையும், உன்னையும் கவனித்துக்கொள்வார் 'என ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதை நம்பிய இன்ஜினியர் திருமணத்துக்கு சம்மதித்தார். பெற்றோர், உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் எனக் கூறி இன்ஜினியரை டிச.6ல் திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். டிச.7ல் கரூரில் உள்ள கோயிலுக்கு காரில் அழைத்து சென்று 50 வயது நபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
தம்பதியாக திருச்சி சென்றதும், தனது கணவருக்கு ஏற்கனவே 5 முறை திருமணம் ஆனதும், சில நாட்களில் மணம் செய்த பெண்கள் மாயமாகினர் என்ற விபரமும் தெரிந்தது. மேலும் திருமணம் பெயரில் ஏழை பெண்களை விற்கும் கும்பலிடம் மாட்டிக்கொண்டது தெரிய திண்டுக்கல்லை சேர்ந்த தோழி, நண்பர்களுக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்து திருச்சி வரவழைத்துள்ளார்.
அவர்களின் உதவியுடன் அங்கிருந்து தப்பிய இவர் திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப்பிடம் புகார் கொடுத்தார். விசாரணை நடத்த நிலக்கோட்டை டி.எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்தார். மேல்விசாரணை நடக்கிறது.

