/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீர் திறந்து விட கோரி முற்றுகை
/
தண்ணீர் திறந்து விட கோரி முற்றுகை
ADDED : டிச 10, 2025 08:31 AM
பழநி: எரமநாயக்கம்பட்டி பட்டி குளத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரி பொதுமக்கள் நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
எரமநாயக்கன்பட்டி பட்டி குளத்திலிருந்து விவசாயம், கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. குளத்தின் அருகே உள்ள போர்வெல்கள் மூலம் எரமநாயக்கன்பட்டி, கணக்கம்பட்டி, கொட்டாம்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, அமர பூண்டி பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இந்த குளத்திற்கு பாப்பன் குளத்தில் இருந்து தண்ணீர் வரத்து ஏற்படும் . தற்போது பாப்பன் குளம் நிரம்பிய நிலையில் பட்டிகுளத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் ஆற்றில் திறந்து விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் குடங்களுடன் பழநி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை பின் கலைந்து சென்றனர்.

