ADDED : ஜூலை 12, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சுகாதார துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார். குடும்ப கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வு கையேட்டினை பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார்.
மருத்துவம் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் கவுசல்யா, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி, நலப்பணிகள் இணை இயக்குநர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.