ADDED : ஆக 07, 2025 05:44 AM
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு மின்வாரிய துணை மின் நிலையத்தில் எழுந்த பெண்கள் சம்பந்தமான புகார்களை விசாரிப்பதற்கு தினமலர் செய்தி எதிரொலியாக தனிகுழுவை நியமித்து மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார்.
வத்தலக்குண்டு துணை மின் நிலைய அதிகாரியின் கம்ப்யூட்டரில் இருந்து பெண்கள் குறித்து ஆபாச மெயில் இவ் அலுவலகத்தின் கீழ் செயல்படும் அனைத்து உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது. இது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க ஊழியர் பாஸ்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள தனிக்குழுவை நியமிக்க கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் தெற்கு செயற்பொறியாளர் சாந்தி தலைமையில் 5 துறை உறுப்பினர்கள், வெளி உறுப்பினர்,ஆலோசராக டாக்டர் சீனிவாசன் ஆகியோரை கொண்ட குழுவை திண்டுக்கல் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் நியமித்துள்ளார். இக்குழு செயற் பொறியாளர் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.