/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு பி.ஓ.எஸ்., அமைச்சர் சக்கரபாணி தகவல்
/
பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு பி.ஓ.எஸ்., அமைச்சர் சக்கரபாணி தகவல்
பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு பி.ஓ.எஸ்., அமைச்சர் சக்கரபாணி தகவல்
பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு பி.ஓ.எஸ்., அமைச்சர் சக்கரபாணி தகவல்
ADDED : அக் 14, 2025 04:32 AM

ஒட்டன்சத்திரம்: ''பகுதி நேர ரேஷன் கடைகள் அனைத்திற்கும் விற்பனை முனைய இயந்திரம் (பி.ஓ.எஸ்.,) வழங்கப்பட உள்ளதாக,'' அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரம் வெரியப்பூர் ஊராட்சி மூனுாரில் புதிதாக கட்டப்பட்ட பகுதி நேர ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்த அவர் பேசியதாவது: 53 மாதத்தில் தமிழ்நாட்டில் 300க்கு மேற்பட்ட ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 21 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்கப் பட்டுள்ளது.
ரேஷன் கடை முன்பு நிழல் கூரை அமைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பகுதி நேர ரேஷன் கடைகள் அனைத்திற்கும் விற்பனை முனைய இயந்திரம் வழங்கப்பட உள்ளது, என்றார்.
வழங்கல் அலுவலர் அன்பழகன், கூட்டுறவு இணைப்பதிவாளர் ராகவ் பாலாஜி, தாசில்தார் சஞ்சய் காந்தி, பி.டி.ஓ., பிரபு பாண்டியன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ஜோதீஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்டனர்.