/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கருப்புசுவாமி கோயில் திருவிழாவில் அரிவாள் மீது ஏறி பூசாரி அருள்வாக்கு

UPDATED : அக் 14, 2025 05:30 AM
ADDED : அக் 14, 2025 04:31 AM

கோபால்பட்டி: -கோபால்பட்டி அருகே செடிபட்டி கருப்புசுவாமி கோயில் திருவிழாவில் பூஜாரி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவையொட்டி கிராம மக்கள், பூஜாரிகள் காப்புக் கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர்.
பெரிய அண்டாக்களில் அசைவ உணவு சமைக்க சுவாமிக்கு படையல் இடப்பட்டது. அப்போது அருள் வந்த பூஜாரி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். தொடர்ந்து அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.