/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி தி.மு.க., எம்.எல்.ஏ.,வை விமர்சித்து போஸ்டர்
/
பழநி தி.மு.க., எம்.எல்.ஏ.,வை விமர்சித்து போஸ்டர்
ADDED : மார் 11, 2024 06:25 AM

பழநி: பழநி அடிவாரம் பகுதியில் தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமாரை விமர்சித்து 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற தலைப்பில் பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டினர்.இதை போலீசாரே கிழத்தெறிந்தனர்.
லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் 'கண்டா வரச் சொல்லுங்க 'என எம்.பி., க்கள் எதிராக ஆங்காங்கு போஸ்டர் ஒட்டப்படும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழநியில் எம்.எல்.ஏ., செந்தில் குமாருக்கு எதிராக அப்போஸ்டர் பா.ஜ.,வினரால் ஒட்டப்பட்டுள்ளது.
பழநி அடிவாரம் கிரிவீதியில் ஆக்கிரமிப்பு காரணமாக நீதிமன்ற வழிகாட்டுதல் படிப் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பழநி பா.ஜ., சார்பில் தி.மு.க.,வுக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த அடிவாரம் வர்த்தகர்கள் நடு ரோட்டில் என குறிப்பிட்டு பழநி எம்.எல்.ஏ., ஐ.பி.செந்தில்குமாரை 'கண்டா வர சொல்லுங்க. பழநி தி.மு.க.,வினர் கையோடு கூட்டி வாருங்கள்' என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதை பல இடங்களில் போலீசாரே கிழித்தெறிந்துள்ளனர். இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

