/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலந்தாய்வை ஒத்திவையுங்க: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கடிதம்
/
கலந்தாய்வை ஒத்திவையுங்க: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கடிதம்
கலந்தாய்வை ஒத்திவையுங்க: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கடிதம்
கலந்தாய்வை ஒத்திவையுங்க: ஆசிரியர் சங்க கூட்டமைப்பு கடிதம்
ADDED : ஜூலை 06, 2025 04:04 AM
திண்டுக்கல்: பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேசுக்கு எழுதிய கடித்ததில் ,4 ஆண்டுக்கு மேலாக பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, உயர்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கவில்லை. இந்தாண்டு பதவி உயர்வு வழங்கினால் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.முதுகலை ஆசிரியர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு நடத்திய பிறகு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்தவேண்டும். நிதி, மாநில தணிக்கை துறையின் வலியுறுத்தலால் பணி நிரவல் நடத்தப்பட்டால் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நடத்தவேண்டும் என கேட்டுள்ளார்.