ADDED : செப் 04, 2026 06:00 PM
எரியோடு, செப்.5-
கோழிப்பண்ணை கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என கால்நடை பராமரிப்புத்துறையினர் எச்சரிக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சில கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகள், கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் அகற்றுகின்றனர். இதனால் இறந்த கோழிகளின் மூலம் ‘கிளாஸ்ரிடியம் பொட்டுலினம்’ எனும் பாக்டீரியா ஏற்படுத்தும் நச்சு கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே கோழிப்பண்ணையாளர்கள் இறந்த கோழிகள், கழிவுகளை ஆழமான குழி தோண்டி சுண்ணாம்பு இட்டு புதைக்கவோ அல்லது எரியூட்டியோ முறையாக அகற்ற வேண்டும். இவ்வாறான பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம். வெளியில் இருந்து வாங்கிய உலர் தீவனங்களை மட்டும் கால்நடைகளுக்கு தர வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
