தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பிரதோஷ சிறப்பு வழிபாடு

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பிரதோஷ சிறப்பு வழிபாடு


UPDATED : நவ 07, 2026 02:55 AM

ADDED : நவ 06, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 02:55 AM ADDED : நவ 06, 2026 08:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தம்: ஐப்பசி மாத பிரதோஷத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்திக்கு 21 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேளதாளம் முழங்க நடந்த சுவாமி புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம், காம்பார்பட்டி ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவபாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், கோபால்பட்டி சிவன் கோயில், கணவாய்ப்பட்டி சிவன் கோயில், குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

பழநி: பழநி முருகன் கோயில் கைலாசநாதர் சன்னதி, அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோவில், அ.கலையம்புத்துார் கைலாசநாதர் கோயில், பொருந்தல் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலையார் கோயில், புதுநகர் யோகேஸ்வரர் ஞானாம்பாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில், வண்ணம்பட்டி சிவன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us