ADDED : அக் 01, 2024 05:41 AM

நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜை , அலங்கார ம், தீபாராதனை நடந்தது. செண்பகவல்லி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வெள்ளிக்கவசம் சாத்த சிறப்பு ஹோம பூஜைகள் செய்யப்பட்டது. அங்குள்ள நந்திக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.
கோபால்பட்டி: கோபால்பட்டி கபாலீஸ்வரர் கோயில் , சிறுமலை அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சிவசக்தி ரூபிணிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய தீபாராதனை , அன்னதானம் நடந்தது. வேம்பார்பட்டி குரு முத்தீஸ்வரர் கோயில், அய்யாபட்டி சிவதாண்டவ பாறை ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவலிங்கம் கோயில், தவசிமடை சிவன் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.