நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் தை மாத பிரதோஷ விழாவை யொட்டி நந்தி சிலைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடும் நடந்தது.
மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குட்டூரில் உள்ள உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலிலும் பிரதோஷ விழா நடந்தது.