UPDATED : நவ 22, 2026 07:02 PM
ADDED : நவ 22, 2026 06:56 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது.
சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாரதனை நடந்தது. ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. விருப்பாச்சி தலையூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயிலில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
