/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
/
திண்டுக்கல் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஜூலை 23, 2025 01:45 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோயில்களில்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலை 4 :00 மணிக்கு நந்தி, கொடிமரம், காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - விஐபி நகர் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி , ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்ய பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில்,ரயிலடி விநாயகர்கோயில்,கூட்டுறவுநகர் விநாயகர்கோயில் ,பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் திரவிய அபிஷேகத்துடன் அஷ்டோத்திர பூஜையுடன் மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.
வடமதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், எரியோடு சாய்பாபா ஞானாலயம், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், வீபதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.
*ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் சிவலிங்கம், நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடந்தது.
விருப்பாச்சி தலையயூற்று ஸ்ரீநல்காசி விஸ்வநாதர் கோயிலில் நந்தி, சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.
நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்படிகலிங்கேஸ்வரர் கோயிலில் 16 வகை அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. நவாமரத்துப்பட்டிபுதுார் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர் கோயிலிலும் அபிஷேகம் நடந்தது.
நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நந்தி சிலைக்கு அலங்காரம் செய்ய 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
மாதா புவனேஸ்வரி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், குட்டூர் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலிலும் மூலவர், நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகையான அபிஷேகம் நடந்தது.