/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இறகுப்பந்து வீரர்களுக்கு பாராட்டு
/
இறகுப்பந்து வீரர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 05, 2025 05:45 AM
திண்டுக்கல் : தேசிய இறகுப்பந்து போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்த மாணவர்களை கவுரவிக்கும் வகையில் திண்டுக்கல் ஸ்ட்ரிங்ஸ் பாட்மின்டன் அகாடமியில் பாராட்டு விழா நடந்தது.
பழநியை சேர்ந்த மாணவர் சிபிஜெரோ ஜே 11 வயது ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். பழநியை சேர்ந்த மாணவி எம். ஜெயசப்தசிரி 13 வயது பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிபதக்கம் வென்றார்.
கே.செல்வமதன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலபதக்கம் வென்றார்.
தமிழ்நாடு தரவரிசைப்பட்டியலில் சரண் 13 வயது ஒற்றையர்,இரட்டையர் பிரிவுகளில் முதலிடம் பிடித்தார். இவர்களுக்கான பாராட்டு விழா திண்டுக்கல் மாவட்ட பாட்மின்டன் அசோசியேஷன் செயலாளர் நாராயணன் தலைமையில் நடந்தது. ஸ்ட்ரிங்ஸ் பாட்மின்டன் அகாடமி உரிமையாளர் அருண்சந்த்,செந்தில்குமார்,ஆர்த்திசெந்தில் குமார் , பள்ளி தாளாளர்கள் ராமநாதன், தக் ஷசீலா, மூத்த வீரர் மனோகர் பேசினர்.

