நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் பொன் விழாவை முன்னிட்டு பெங்களூரு ஷியாம்ஸ் ஆர்ட் கிராப்ட் அகாடமி 1330 திருக்குறள் எழுதும் போட்டி நடத்தியது.
இதில் பங்கேற்ற வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவி எம்.என்.பிரத்திகா உள்பட 159 பேர் வெற்றி பெற்றனர்.
இதற்காக ஓசூரில் நடந்த விழாவில் பிரத்திகாவுக்கு திருக்குறள் இளந்துாரிகை விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் ஆர்.கே.பெருமாள், தலைமை ஆசிரியர் ராமு, ஆசிரியர்கள் பாராட்டினர்.

