/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாயம் செழிக்க வேண்டுதல் 50 கிடாய் வெட்டி அன்னதானம்
/
விவசாயம் செழிக்க வேண்டுதல் 50 கிடாய் வெட்டி அன்னதானம்
விவசாயம் செழிக்க வேண்டுதல் 50 கிடாய் வெட்டி அன்னதானம்
விவசாயம் செழிக்க வேண்டுதல் 50 கிடாய் வெட்டி அன்னதானம்
ADDED : ஜூலை 28, 2025 05:50 AM

கோபால்பட்டி - கோபால்பட்டி அருகே அய்யாபட்டி ஜடாமுனீஸ்வரர் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி 50 கிடாய்கள், சேவல் பலியிடப்பட்டு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது.
மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் அப்பகுதி விவசாயிகள் 50 கிடாய்கள் மற்றும் சேவல், அரிசி மூடைகளையும் காணிக்கையாக அய்யாபட்டி ஜடா முனீஸ்வரர் கோயிலுக்கு வழங்கினர். நேற்று காலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து கோவில் முன் 50 பொங்கல் வைக்கப்பட்டு காணிக்கையாக வழங்கிய கிடாய்கள் மற்றும் சேவல்களை பலியிட்டு அசைவ உணவு சமைக்கப்பட்டது.
ஜடாமுனீஸ்வரருக்கு படையலிட்டு நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டி பூஜை செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோம்பைப்பட்டி, செடிப்பட்டி, அய்யாபட்டி, வேம்பார்பட்டி, கோபால்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.