/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பருவமழை துவங்கும் முன்பே தேவை முன்னெச்செரிக்கை; துறை அதிகாரிகளை தற்போதே தயார் செய்ய வழி காணுங்க

ADDED : ஆக 13, 2024 11:52 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி , ஆடலுார், பன்றிமலை, நத்தம், சிறுமலை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் மலைப்பகுதிகளை சார்ந்து உள்ளன. பருவ மழை காலங்களில் இங்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
ஆண்டுதோறும் இத்தருணங்களில் மண் சரிவு, மரங்கள் சாய்வது, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்வது, வீடுகள் சேதம் அடைவது உள்ளிட்டவை நிகழும். நடப்பாண்டில் நல்ல மழை பெய்துள்ளது.
தற்போதே கனமழை மாவட்டங்களில் கொட்டி வருகிறது. இதையடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு, மரங்கள் சாய்வது, மண் சரிவுகள் ஏற்படுவது, ரோடுகள் சேதமடைந்து குண்டு, குழியுமாக இருப்பது என தற்போது அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதை கருதி மழைக்கு முன் பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி, தரைப்பகுதியில் எடுக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் செய்ய வேண்டும்.
குறிப்பாக சேதமடைந்த ரோடுகளை தற்காலிகமாக சீர் செய்வது, மண் சரிவை சீர் செய்ய மண் அள்ளும் இயந்திரங்களை தயார் நிலையில் வைப்பது, மரங்களை அறுக்கும் இயந்திரங்கள் ,பேரிடர் மீட்பு குழு உருவாக்கி பயிற்சியளித்தல், வருவாய்த்துறை, தீ அணைப்பு துறையினரை தயார்படுத்த வேண்டும்.
இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சீர் செய்ய வாய்ப்புகள் ஏற்படும். பேரிடர் மீட்புகளுக்கான வசதிகளை செய்தும், தொடர்பு கொள்ளும் அலைபேசி எண், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.