/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெயர் பலகைகளில் தமிழ் பிழைகளை தடுக்கலாமே; துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
/
பெயர் பலகைகளில் தமிழ் பிழைகளை தடுக்கலாமே; துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
பெயர் பலகைகளில் தமிழ் பிழைகளை தடுக்கலாமே; துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
பெயர் பலகைகளில் தமிழ் பிழைகளை தடுக்கலாமே; துறை அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ADDED : மே 28, 2024 03:36 AM

-வடமதுரை, : திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, தனியார் சார்ந்த பெயர் பலகைகளில் தமிழ் மொழியை பிழையுடன் எழுதுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தொல்லியல் களமான ஆதிச்சநல்லலுாரில் கி.மு. 500 முதல் தமிழ்-பிராமண கல்வெட்டுகள் கிடைத்துள்ளதால் இது கி.மு. 500க்கு முன் பிறந்ததாக கருதப்படுகிறது. தோற்றம் பழமை,கணிசமான பண்டைய இலக்கியங்கள்,சுதந்திர பாரம்பரியம் கொண்டிருந்ததால் 2004ல் இந்தியாவின் செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்கா, மலேசியா, மொரிஷியஸ், சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது. சில நாடுகளில் சிறுபான்மை மொழியாக அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 74 மில்லியனுக்கும் அதிகமான பேச்சாளர்களுடன் 18-வது அதிகம் பேசப்படும் மொழியாக தமிழ் உள்ளது. இவ்வாறு பல பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்ட தமிழ் மொழி தமிழகத்தில் பல இடங்களில் பரிதவிப்பதை கண்டு தமிழ் அறிஞர்கள்,ஆசிரியர்கள், ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். மாவட்டத்தில் தனியார் பலர் தங்கள் வாகனங்களில் தமிழை பிழையுடனும், ஆங்கில எழுத்துகளை கலந்து எழுதியிருப்பதையும் பார்க்க முடிகிறது. அரசு துறை சார்ந்த சில கட்டடங்கள், பஸ்களிலும் கூட தமிழ் வார்த்தைகளை பிழையுடன் எழுதியிருப்பதை அதிகம் காண முடிகிறது. இதுவிஷயத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் செயல்பாடு இல்லாததையே இது அப்பட்டமாக காட்டுகிறது என தமிழ் மொழி ஆர்வலர்கள் ஆதங்கப்படுத்துகின்றனர்.
-
..........
-சிறார்கள் குழம்புகின்றனர்
அரசு சார்ந்த இடங்களான பயணியர் நிழற்குடைகள், குடிநீர் தொட்டிகள், அரசு டவுன் பஸ்களின் பெயர் பலகைகளில் தமிழ் மொழியை பிழையுடன் எழுதியிருப்பதை சில இடங்களில் பார்க்க முடிகிறது. சில இடங்களில் ஒரே அரசு துறையின் பலகைகளில் ஒரே ஊர் பெயர் வெவ்வேறான பொருளாகும்படி எழுதப்பட்டும் உள்ளது. இளைய தலைமுறை சிறார்களை பெரிதும் குழப்பிவிடும் செயலாக உள்ளது. முதற்கட்டமாக அரசு சார்ந்த இடங்களில் இதுபோன்ற பிழைகளை கண்டிப்புடன் தவிர்க்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கட்டமான தனியார் இடங்கள், வாகனங்கள் எதுவாகினும் தமிழ் மொழியை பிழையுடன் எழுதியிருந்தால் கண்டிப்பு காட்டி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.வெறுமனே அரசு அலுவலகங்களின் மீது 'தமிழ் வாழ்க' ஒளிர்ந்தால் மட்டும் போதாது.
-
பி.பலராமன், அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி, வடமதுரை மொட்டணம்பட்டி.
.....................................
-