/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொடர்ந்து விலை உயரும் பூக்கள் மல்லி கிலோ ரூ.5000க்கு விற்பனை
/
தொடர்ந்து விலை உயரும் பூக்கள் மல்லி கிலோ ரூ.5000க்கு விற்பனை
தொடர்ந்து விலை உயரும் பூக்கள் மல்லி கிலோ ரூ.5000க்கு விற்பனை
தொடர்ந்து விலை உயரும் பூக்கள் மல்லி கிலோ ரூ.5000க்கு விற்பனை
ADDED : பிப் 02, 2025 05:07 AM
திண்டுக்கல்,: தொடர்பனிப்பொழிவினால் பூக்களின் வரத்து குறைந்தாலும் தேவை அதிகரிப்பின் காரணமாக பூக்களின் விலை உயர்ந்து மல்லி கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி, செம்பட்டி, வெள்ளோடு. மைலாப்பூர், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, அய்யலுார், ஆத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டுவரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும் செடியிலே பூக்கள் கருகி விடுவதாலும் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 டன் பூக்கள் விற்பனைக்கு வரக்கூடிய இடத்தில் 30 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. மேலும் வளர்பிறை சுபமுகூர்த்தம் என்பதால் பூக்களின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கிலோ ரூ.3500 க்கு விற்பனையான மல்லிகை தற்போது ரூ.5000 , ரூ2,000 க்கு விற்ற முல்லை ரூ2,500, ரூ.1,500 க்கு விற்ற கனகாம்பரம் ரூ2,000 , 1700 க்கு விற்ற ஜாதிப்பூ ரூ 2000,ரூ 1,500க்கு விற்ற காக்கரட்டான் ரூ. 250க்கு விற்பனையானது. இதேபோல் பட்டன் ரோஸ் ரூ. 400 , செவ்வந்தி ரூ.150,கோழி கொண்டை ரூ.60, ரோஸ் ரூ180, அரளி ரூ.200, தாமரை ரூ.30 என விற்பனையானது.