ADDED : மார் 24, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு கூட்டம் நடந்தது. கொள்கைபரப்பு செயலர் உதயகுமார் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் சரவணக்குமார், செயலர் சந்தோஷ்குமார், பொருளாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பு செயலர் குமார் வரவேற்றார். கோடை வெப்பம், நோய்நொடிகளிலிருந்து பொதுமக்கள், கால்நடைகளை பாதுகாத்திடும் சிறப்பு பூஜை நடந்தது. வருவாய் இல்லாத பூஜாரிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, பஸ்பாஸ் வழங்க வேண்டும். பூஜாரிகள் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள அரசு வழிவகை செய்ய வேண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய தலைவர் காளிமுத்து நன்றி கூறினார்.