UPDATED : அக் 28, 2026 10:41 PM
ADDED : அக் 28, 2026 10:36 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், அனைத்து கோயில் பரம்பரை பூஜாரிகள் மற்றும் இனாம் பூமி விவசாயிகள் பாதுகாப்பு பேரவையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனாம் பூமி விவசாயிகள் பாதுகாப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி தலைமை வகித்தார். அவர் கூறுகையில், ‘பரம்பரையாக சமுதாயக் கோயில்களில் பூஜை செய்து வரும் பூஜாரிகளின் நிலங்களை எந்த சட்ட நடவடிக்கை, வழிகாட்டுதலும் இன்றி ஹிந்து சமய அறநிலையத்துறையானது ஏலம் மூலம் பறிக்க முயற்சி செய்கிறது. பழநி பெரியம்மாபட்டி மருதகாளியம்மன் கோயில் நிலத்தை ஏலம் விடுவதை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.
