/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமாகும் துவக்கப்பள்ளி கட்டட கூரையால் அவதி
/
சேதமாகும் துவக்கப்பள்ளி கட்டட கூரையால் அவதி
ADDED : ஜூலை 18, 2025 05:34 AM

மேம்பாலத்தில் மழைநீர்
திண்டுக்கல் அனுமந்த நகர் ரயில்வே மேம்பாலத்தில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, பாதசாரிகள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர் . தண்ணீர் கடந்து செல்ல வடிகால் அமைக்க வேண்டும்.யோகேஷ், திண்டுக்கல்.
..........----------மின்கம்பத்தில் செடிகள்
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் குட் செட் அருகே மின்கம்பத்தில் செடிகள் படர்ந்து புதர் மண்டியுள்ளது .இதனால் விபத்து அபாயம் உள்ளது .இதன் அருகே செல்வோர் பயத்துடன் செல்கின்றனர்.இதன் செடிகளை அகற்ற வேண்டும்.மணிவேல், திண்டுக்கல்.
................----------சேதமான பள்ளி கட்டட கூரை
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அழகுபட்டி ஊராட்சி பட்டத்துநாயக்கன்பட்டியில் துவக்க பள்ளி கட்டடம் கூரை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -அ.மயில்வாகனம், பட்டத்துநாயக்கன்பட்டி.
..................----------நோய் தொற்று
திண்டுக்கல் -வத்தலக்குண்டு ரோட்டில் கோழிக் கழிவுகளை கொட்ட பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது .நோய் தொற்று தவிர்க்க கோழிக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். முரளி, திண்டுக்கல்.
.................----------திறந்து கிடக்கும் சாக்கடை
வடமதுரை கிளை நுாலகத்திற்கு செல்லும் முகப்பு பகுதியில் காக்கடையில் மூடி இல்லாமல் இருப்பதால் பலரும் சாக்கடைக்குள் தடுமாறி கால் வைக்கும் நிலை உள்ளது. இதை கருதி இதன் கட்டமைப்பிற்கு மூடி அமைக்க வேண்டும். -- கந்தசாமி, வடமதுரை................-----------சேதமான ரோடு
பழநி அக் ஷயா பள்ளி பின்புறம் ரோடு சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது .இங்கு குப்பை வேறு கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது . மாணவர்கள் அதிக அளவில் செல்வதால் இதனை சரி செய்ய வேண்டும் .முகமது ஜின்னா, மானுார்..............-----------மின் ஒயர்கள் உரசுவதால் தீ
வடமதுரை அருகே தென்னம்பட்டி மேற்கு மந்தை அங்கன்வாடி மைய கட்டட மேல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்களால் விபத்து அபாயம் உள்ளது .காற்று அடிக்கும் போது ஒயர்கள் உரசி தீ பிடிக்கிறது. விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும். முருகன், தென்னம்பட்டி.
..............-----------