/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்
/
மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்
ADDED : செப் 03, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: சாணார்பட்டி வி.எஸ்.கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தினசரி தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை 30க்கு மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல் சென்ற பஸ்சை அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த மனோகரன் 30,ஓட்டினார். கண்டக்டராக வேலாயுதம்பட்டியை சேர்ந்த அன்பு 40, இருந்தார். பஸ் வி.குரும்பபட்டி அருகே- வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தென்னை மரத்தில் மோதியது. பஸ் முன்பக்க - கண்ணாடி நொறுங்கியது. இதில் கல்லுாரி மாணவி யோகப்பிரியா 19, பள்ளி மாணவிகள் சாதனா 12, ரஞ்சனி 13, மற்றும் சபீனாபேகம் 30, சரஸ்வதி 38, செல்வி 45, நித்தீஸ்வரி உட்பட 21 பேர் காயமடைந்தனர்.