ADDED : ஆக 11, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை ஒன்றிய ஹிந்து குலாலர் சமுதாய நல அறக்கட்டளை சார்பில் 10வது ஆண்டாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு, பரிசளிப்பு விழா நடந்தது.
நிர்வாக தலைவர் கணேசன் தலைமை வகித்தார். நிதி அறங்காவலர் கதிரேசன் வரவேற்றார். அறங்காவலர் ஜெயராமன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
அறங்காவலர்கள் சவுந்திரராஜன், பாண்டி, செல்வராஜ், ஆதிராஜன், அழகர்சாமி, சின்னத்துரை முன்னிலை வகித்தனர். மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பானுமதிகண்ணன், ஒட்டன்சத்திரம் வர்த்தக பிரமுகர் தங்கவேல் பரிசுகளை வழங்கினர், தமிழ்நாடு கல்வி மேம்பாட்டு கழக பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மாநில பொருளாளர் பாஸ்கரன், துணைத் தலைவர் ரவி, திருப்பரங்குன்ற மண்டப தலைவர் சுப்புராஜ் பங்கேற்றனர். அறங்காவலர் முருகன் நன்றி கூறினார்.