ADDED : ஆக 15, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: முசுவத்து அன்னை அறக்கட்டளை, நிலக்கோட்டை கணித மன்றம் ,பி.வி.பி., கல்விக்குழுமம் சார்பில் வத்தலக்குண்டு ஒன்றியத்தில் முதல் 3 இடங்களை பிடித்த 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா நிலக்கோட்டை கணித மன்ற தலைவர் பிச்சைநாதன் தலைமையில் நடந்தது.
அன்னை அறக்கட்டளை தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் காசிமாயன் வரவேற்றார். பேராசிரியர் பாலசுப்பிரமணியம், பி.வி.பி., கல்வி குழுமம் தாளாளர் டாக்டர் செல்வகுமார், ஊக்குவிப்பு பயிற்றுநர் வீரா பாலச்சந்திரன், பேராசிரியர் முருகானந்தம், சாய்ஸ் அகாடமி இயக்குநர் முத்து கணேஷ், முதுகலை ஆசிரியர் செந்தாமரைக் கண்ணன், மாநில நல்லாசிரியர் பாலமுருகன், கல்லுாரி முதல்வர் உபகார செல்வம், அரசுப் பணியாளர் குணவதி பங்கேற்றனர்.