ADDED : ஆக 19, 2025 01:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்; மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒக்கலிகர் மகாஜன சங்கம் சார்பில் 2024---25ம் ஆண்டு மகாசபை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
செயலாளர் பிரியம் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை செயலாளர் கோபால் நன்றி கூறினார். இதோடு 2024-25 கல்வி ஆண்டில்80 சதவீத மதிப்பெண் பெற்ற 810 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
வழக்கறிஞர் லோகநாதன் வரவேற்றார். ஓய்வு நீதிபதி ராம.பார்த்திபன், மதுரை வேளாண் கல்லுாரி முதல்வர் டாக்டர் ராமமூர்த்தி, செயலாளர் பிரியம் நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம் பேசினர்.
பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.