ADDED : ஜூலை 08, 2026 03:29 AM
அ நிறம் | அளவு
சித்தையன்கோட்டை: சித்தையன்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ., ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட செயலாளர் பவுசூர் ரகுமான் தலைமை வகித்தார்.
பள்ளிவாசல் முத்தவல்லிகள் உதுமான்அலி, சேக்தாவூத், ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தனர். ஆத்துார் எம்.எல்.ஏ., ஐ.பெரியசாமி பரிசுகள் வழங்கி பேசினார். பேரூராட்சி தலைவர் போதும்பொண்ணு, துணைத்தலைவர் ஜாகிர்உசேன், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.-
