/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலை தடுப்புகளில் ஒளிரும் மின் விளக்குகள் இல்லாததால் தொடரும் விபத்து
/
சாலை தடுப்புகளில் ஒளிரும் மின் விளக்குகள் இல்லாததால் தொடரும் விபத்து
சாலை தடுப்புகளில் ஒளிரும் மின் விளக்குகள் இல்லாததால் தொடரும் விபத்து
சாலை தடுப்புகளில் ஒளிரும் மின் விளக்குகள் இல்லாததால் தொடரும் விபத்து
ADDED : ஏப் 01, 2025 05:18 AM

நத்தம்: நத்தம் - கோபால்பட்டி நெடுஞ்சாலை பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் ஒளிரும் மின் -விளக்குகள், சாலையில் ஒளிரும் சோலார் மின் விளக்குகள், ஒளிரும் பட்டைகள் அமைக்காதது என சாலை தடுப்புகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது.
மாவட்டத்தை பொறுத்தவரையில் சாலை வசதி என்பது இன்றளவும் பல் வேறு கிராமங்களில் தன்னிறைவு பெறாத நிலையில் உள்ளது.குறிப்பாக நத்தம் பகுதி மலைக்கிராமங்களில் இன்று வரையும் மண்பாதையே உள்ளது. திண்டுக்கல், நத்தம் என 2 நகரங்களை இணைக்கும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து சாணார்பட்டி, கோபால்பட்டி, கணவாய்பட்டி வழியாக நத்தம் வரையில் நெடுஞ்சாலை உள்ளது.7 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலை 10 மீட்டர் அகல சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பழநி பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நடந்து செல்வதற்காக 4 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கப்பட்டது.சாலை தரமாக அமைக்காததால் லேசான மழைக்கு கூட தாக்குப்பிடிக்காது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பள்ளம் மேடாக மாறிவருகிறது.
சாலை பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் ஒளிரும் மின்விளக்குகள், சோலார் விளக்குகள், ஒளிரும் பட்டைகள் போன்றவை அமைக்காததாலும், சாலை தடுப்புகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதை தடுக்க சாலையில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த நெஞ்சாலை துறை முன்வர வேண்டும். தற்போது டோல்கேட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. சாலையில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக மேற்கொள்ளாமல் டோல்கேட் திறக்கும் பணி நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்து வருகின்றனர்.
...............
ஆங்காங்கு ஒட்டு போடும் பணி
எஸ்.மணிவண்ணன், ம.தி.மு.க., இணையதள அணி மண்டல பொறுப்பாளர், கோபால்பட்டி:
நத்தம் இடையே விரிவுபடுத்தப்பட்ட சாலை செயல்பாட்டுக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளிலே சேதமடைந்து பள்ளம் மோடாக மாறி உள்ளது. சேதமான இடங்களில் ஆங்காங்கே ஒட்டு போடும் வேலையையும் செய்து வருகின்றனர்.பாதயாத்திரை பக்தர்களுக்காக போடப்பட்ட நடைபாதை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பேவர் பிளாக்கற்கள் சேதமடைந்துள்ளன.
இதனை அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டும். கன்னியாபுரம் சந்தான வர்த்தினி ஆற்றுப் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலை மிகவும் பள்ளமாகவும் உள்ளது. சாலையின் இரு பக்கமும் மேடு, நடுவில் தொட்டில் போன்ற அமைப்பில் இந்த சாலை உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையை புதிய சாலை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவிற்கு அதன் தரம் உள்ளது.
...............
தேவை பாதுகாப்பு நடவடிக்கை
எஸ்.பாலசுந்தரம், நகைக் கடை உரிமையாளர், கோபால்பட்டி: எர்ரமாநாயக்கன்பட்டி குறிப்பாக கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே தடுப்புகள்அமைக்கப்பட் டுள்ளது.ஆனால் இந்த தடுப்புகளில் ஒளிரும் பட்டைகள், சோலார் எச்சரிக்கை விளக்கு என எதுவும் அமைக்காமல் பாதுகாப்பானது மோசமான நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்கள் சாலை தடுப்புகளில் மோதி விபத்துகளில் சிக்குகின்றனர்.கோபால்பட்டியில் சில மாதங்களாக பல்வேறு விபத்துக்கள் நடந்து பலர் காயம் அடைந்துள்ளனர்.சாலை தடுப்புகளில் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
..........
தீர்வு:
நத்தம் திண்டுக்கல் செல்லும் சாலை 31 கிலோமீட்டர் துாரம் கொண்டது. இந்த சாலையின் பல இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளது. கோபால்பட்டி, கணவாய்ப்பட்டி, எர்ரமநாயக்கன்பட்டி, நத்தம், மெய்யம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதில் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு நலனுக்காக ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். தடுப்புகளுக்கு முன் சாலையிலும் எச்சரிக்கை வெள்ளை கோடுகள் அதன் மேல் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் , பள்ளிகள் உள்ள கோபால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பேரிகார்ட் அமைக்கப்படாமல் உள்ளது. இந்த ஒளிரும் மின்விளக்குகள், தேவையான இடங்களில் பேரிகார்டு இல்லாததால் வாரந்தோறும் விபத்துகள் பல நடந்து வருகிறது. அதனால் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.