/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டவுன்பஸ் இயக்கத்தில் பிரச்னை; மறியல் காமாட்சிபுரத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

ADDED : டிச 08, 2024 05:15 AM
ரெட்டியார்சத்திரம் : டவுன் பஸ்கள் இயக்கத்தில் பிரச்னை காரணமாக மறியல் நடத்த வந்த மக்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம் இடையே இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ்களின் இயக்கம் முன்னறிவிப்பின்றி குறைக்கப்பட்டது. காமாட்சிபுரம் பஸ் ஸ்டாப்பில் சில பஸ்கள் நிற்காமல் பயணிகளை புறக்கணித்து செல்வதாக புகார் எழுந்தது. மார்க்சிஸ்ட் சார்பில் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
நடவடிக்கையில் அலட்சியம் நீடித்த சூழலில் நேற்று மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு நடந்தது. இதற்காக ஒன்றிய செயலாளர் சக்திவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி தலைமையில் ஏராளமான திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மெயின் ரோட்டில் கூடினர்.
தகவலறிந்த தாசில்தார் ஜெயபிரகாஷ், அரசு போக்குவரத்து கழக வணிக பிரிவு துணை மேலாளர் ரவிக்குமார், ஒட்டன்சத்திரம் கிளை மேலாளர் சிவசாமி, டி.எஸ்.பி., கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தினர். டவுன் பஸ் இயக்கத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் மறியல் முயற்சியை கைவிட்டனர்.