/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் வீட்டு மனை பட்டாக்களை கணினி மயமாக்குவதில் குளறுபடி; பல்வேறு வகைகளில் இன்னல்களை சந்திக்கும் மக்கள்

ADDED : செப் 29, 2025 04:43 AM

தமிழக அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவு, வருவாய், ஊரக வளர்ச்சித் துறை என முக்கிய துறைகளில் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. வருவாய்த் துறையில் நில பதிவேடுகள் கணினிமயம் ஆக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பதிவுத்துறையில் கிரையமாகும் சொத்துக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தானாகவே கம்ப்யூட்டர் பட்டாக்களாக மாறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறையில் சொத்து, குழாய் வரிகள் கணினிமயமாக்கம் செய்யப்பட்டுள்ளது.
வேளாண் துறையில் பயிர் நிலவரம் குறித்த சர்வேயில் குளறுபடிகள் நடந்து வருவதால் இன்னும் பதிவேற்றம் செய்ய முடியாமல் உள்ளது. அதேபோல வருவாய்த் துறையில் நில உரிமை பட்டாக்களைத் தவிர நத்தம் வீட்டு மனை பட்டாக்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டு 2 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு இன்னல்களை கொடுத்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நத்தம் வீட்டுமனை பட்டாக்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கு உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு அனைத்து பதிவேடுகளும் கொண்டு செல்லப்பட்டன. பதிவேற்றுவதற்கு உதவியாக அந்தந்த பகுதி வி.ஏ.ஓ.,க்கள் சர்வேயர் இருக்க வேண்டும். ஆனால் உதவி இயக்குனர் அலுவலகம் சர்வேயர், வி.ஏ.ஓ., க்களை அழைக்காமல் அவர்களாகவே பதிவேற்றம் செய்ததால், பூர்வீகமாக இருக்கும் பட்டாக்கள் அவரவர் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பட்டாக்களில் பிரிக்கப்பட்டவைகள் (சப் டிவிஷன்) பெயர் மாற்றம் ஆனவைகள் எதுவும் கணினியில் பதிவேற்றம் செய்யவில்லை. அதற்கு பதிலாக பூஜ்ஜியம் என காட்டுகிறது. தமிழ் நிலம் செயலியில் பதிவேற்றம் செய்யாத வைகளுக்கு முழு விபரம் தெரிவதில்லை.