/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விநாயகர் சிலை விசர்ஜனம் ஹிந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலம்
/
விநாயகர் சிலை விசர்ஜனம் ஹிந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலம்
விநாயகர் சிலை விசர்ஜனம் ஹிந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலம்
விநாயகர் சிலை விசர்ஜனம் ஹிந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலம்
ADDED : ஆக 30, 2025 04:48 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் விசர்ஜனம் ஊர்வலம் நேற்று நடந்தது.
திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் நகர், ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 55 விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுக்கு பின் ஊர்வலமாக திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிற்கு எடுத்துவரப்பட்டன. அங்கு, நடந்த கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பேரரசு, சிறுமலை அடிவார ஆதிகுரு வித்யா தட்சாணமூர்த்தி ஆலய ஞான சிவானந்தசுவாமிகள் கலந்துகொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் சஞ்சீவி ராஜ், துணைத்தலைவர்கள் வினோத்ராஜ், ராஜேந்திரன், நிர்வாகி சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய ஊர்வலம் வெள்ளை விநாயகர் கோயில், அங்குவிலாஸ் இறக்கம், தீயணைப்பு நிலையம், வாணிவிலாஸ் மேடு, பழநி ரோடு வழியாக மீண்டும் வெள்ளை விநாயகர் கோயில் வழியாக கோட்டை குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
வடமதுரை : அய்யலுாரில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் தீத்தாகிழவனுார் பேசும் பழனியாண்டவர் கோயிலில் துவங்கியது. கடை வீதியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஸ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி தலைவர் பரதன், இந்து முன்னணி இலக்கியப் பிரிவு மாநில தலைவர் கண்ணன், ஒன்றிய தலைவர் சக்திவேல், நகரத் தலைவர் லோகநாதன் பேசினர். வடமதுரை வழியே தும்மலக்குண்டு ரோடு நரிப்பாறை கல்குவாரியில் சிலைகள் கரைக்கப்பட்டன.
வேடசந்தூர்: இந்து தமிழர் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் எல்லை காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு ஆத்துமேடு, பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, தாலுகா ஆபிஸ் ரோடு, கொல்லம்பட்டறை வழியாக அடைக்கனுர் அருகில் உள்ள குடகனாற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. பெண்கள் தங்களது வீடுகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தை இந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் துவக்கி வைத்தார். மாநில செயலாளர் பழனி மனோஜ் குமார், மாவட்டத் தலைவர் மணிகண்ட பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.