/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருமணத்திற்கு சென்ற பேராசிரியர்கள்; வெறுமனே வந்து சென்ற மாணவிகள்
/
திருமணத்திற்கு சென்ற பேராசிரியர்கள்; வெறுமனே வந்து சென்ற மாணவிகள்
திருமணத்திற்கு சென்ற பேராசிரியர்கள்; வெறுமனே வந்து சென்ற மாணவிகள்
திருமணத்திற்கு சென்ற பேராசிரியர்கள்; வெறுமனே வந்து சென்ற மாணவிகள்
ADDED : நவ 30, 2024 05:44 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியர்கள் பெரும்பாலானோர் திருமணத்திற்கு சென்றதால் வகுப்புகள் நடக்காமல் மாணவிகள் வெறுமனே கல்லுாரி வந்து சென்றனர்.
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லுாரியில் 3 ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என 140 பேர் பணியாற்றுகின்றனர். கல்லுாரி பேராசிரியை ஒருவரின் இல்ல திருமண விழா மதுரையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க கல்லுாரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் என 100க்கு மேற்பட்டோர் மதுரைக்கு சென்றனர். இதனால் கல்லுாரி மாணவிகள் மதியம் வரை வகுப்புகள் இன்றி காத்திருந்தனர். 20 பேராசிரியர்கள் மட்டுமே கல்லுாரியில் இருந்தனர். காலை 9:30 மணிக்கு தொடங்கும் கல்லுாரி மதியம் 3:00 மணி வரை நடக்கும் நிலையில் மதுரை நிகழ்ச்சிக்கு சென்ற பேராசிரியர்கள் மதியம் 2:30 மணிக்குதான் கல்லுாரிக்கு திரும்பினர். மதியம் 3:00 மணிக்கு கல்லுாரியும் முடிந்தது. மாணவிகளும் வகுப்புகள் நடக்காது வெறுமனே வந்து திரும்பினர்.
பேராசிரியர்களும்,விரிவுரையாளர்களும் விடுப்பு எடுத்தார்களா, முன் அனுமதியுடன் பணி நேரத்தில் சென்றார்களா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.கல்லுாரி கல்வி மண்டல இணை இயக்குநர் குணசேகரன் கூறியதாவது: எம்.வி.எம்., கல்லுாரி பேராசிரியர்களில் பெரும்பாலானோர் மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றது குறித்த விவரம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கல்லுாரி முதல்வரிடம் விசாரிக்கப்படும் என்றார்.