ADDED : ஆக 28, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே சிறுகுடியை சேர்ந்தவர் பழனி 65. இவரது தம்பி ஜோதி 62. இவர்கள் இருவருக்கும் சொத்து சம்பந்தமாக ஏற்கனவே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ஆக. 25-ம் தேதி ஜோதி தனது அண்ணன் பழனி வீட்டிற்கு சென்று சொத்தை பிரித்து தரமாட்டாயா என கூறி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கடப்பா கல்லை வைத்து தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜோதி மீது வழக்கு பதிந்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.