/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்; 150 பேர் கைது

ADDED : டிச 05, 2024 06:23 AM

திண்டுக்கல்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150 க்கு மேற்பட்ட பா.ஜ., ஹிந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அந்நாட்டு அரசை கண்டித்தும், வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் திண்டுக்கல் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. போலீசார் அனுமதி மறுத்தனர்.
இருப்பினும் நேற்று காலை தடையை மீறி மணிக்கூண்டு அருகே பா.ஜ., ஹிந்து அமைப்பினர் திரண்டனர். 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து பா.ஜ., ஆர்.எஸ்.எஸ், ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்பட பல்வேறு ஹிந்து அமைப்பினர் குவிந்தனர்.
பா.ஜ., மாவட்ட தலைவர்கள் தனபாலன், கனகராஜ் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜா, விஸ்வ ஹிந்து பரிஷத் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இவர்களில் 150 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.