/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அன்னதானத்திற்கு எதிர்ப்பு: போலீஸ் குவிப்பு
/
அன்னதானத்திற்கு எதிர்ப்பு: போலீஸ் குவிப்பு
ADDED : நவ 02, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: என் பஞ்சம்பட்டியில் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக அன்னதானம் நடத்துவதற்காக ஒரு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அனுமதி பெற்றிருந்தனர். அதன்படி கும்பாபிஷேக விழா நடந்து வருகிறது. அன்னதானத்திற்கு கிராம மையத்தில் உள்ள மைதானத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் தேவாலயத்தில் கூடினர்.
கருப்பு கொடி ஏற்றி காத்திருப்பு போராட்டம் துவங்கினர். தாசில்தார் முத்து முருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு ஏற்படவில்லை.இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

