/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழிலாளர் சட்டம் எதிராக ஆர்ப்பாட்டம்
/
தொழிலாளர் சட்டம் எதிராக ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 11, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தொழிலாளர் நல சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட், இ.கம்யூ., விடுதலை சிறுத்தை சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் செயலாளர் மைதீன் பாவா முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், பழங்குடியின மக்கள் சங்க செயலாளர் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் பாவரசு பேசினர்.
மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகேசன், மாநகர செயலாளர் அரபு முகமது கலந்து கொண்டனர்.

